டாக்டர் படத்திற்கு பிறகு அடுத்து வெளிவர உள்ள படம் டான். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்அட்லியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்தை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்துள்ளார். படம் முழுமையாக தயாராகி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக வெளிவராமல் இருந்தது. தற்போது வருகிற மார்ச் 25ம் தேதி வெளிவரும் என்று அதிகாரபூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது.
39