இறுதி சுற்று, சூரரை போற்று படங்களின் மூலம் புகழ்பெற்றவர் சுதா கொங்கரா. இவரது பெயரில் பல போலி டுவிட்டர் கணக்குகள் துவங்கப்பட்டு, தவறாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுதா கொங்கராவே ட்விட்டரில் புதிய கணக்கை துவங்கி உள்ளார். சுதா கணக்கை துவங்கிய சில நிமிடங்களிலேயே இவரின் ஃபாலேயர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. ஒரே நாளில் ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 39,000 ஐ கடந்தது. இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. நடிகர், நடிகைகளுக்கு இணையாக ஒரு டைரக்டருக்கு இப்படி ஒரு வரவேற்பா என அனைவரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.
டுவிட்டரில் இணைந்தார் சுதா கொங்கரா: நடிகைகளுக்கு இணையாக ஃபாலோயர்கள் குவிந்தனர்
0 comment
80