பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா ரவிச்சந்திரன். பலே வெள்ளையத்தேவா, கருப்பன், பிருந்தாவனம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மாயோன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது தன்யா தெலுங்கில் அறிமுகமாகிறார். ஆர்எக்ஸ் 100 படத்தின் மூலம் புகழ்பெற்ற கார்த்திகேயா, அஜித்தின் வலிமை படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.அவர் ஹீரோவாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் சாய்குமார், தனிகல பரணி, பசுபதி உள்பட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீசரிபள்ளி இயக்குகிறார். பிரசாந்த் விஹாரி இசை அமைக்கிறார். மவுலி ஒளிப்பதிவு செய்கிறார். ராம ரெட்டி தயாரிக்கிறார்.
36