சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் டான். அட்லி உதவியாளர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. பிரியங்கா அருள் மோகன் , எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, ஷிவாங்கி, பால சரவணன், ஆர்.ஜே விஜய், உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி வருகிற மார்ச் 25ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அன்றைய தினம் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள பிரம்மாண்ட படமான ஆர்.ஆர்.ஆர் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டதால் அந்த படத்துக்கு வழிவிட்டு டான் படம் வெளியீட்டை தள்ளி வைத்தார் சிவகார்த்திகேயன். அதன்படி டான் படம் வருகிற மே மாதம் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
32