ஒரு காலத்தில் பிரமாண்ட தயாரிப்பாளராக இருந்த கே.டி.குஞ்சுமோன் தற்போது தனது ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் இசை அமைப்பாளராக கீரவாணியை அறிவித்தார். தற்போது படத்தின் நாயகி நயன்தாரா என்று அறிவித்து பரபரப்பு கிளப்பினார். ஆனால் அவர் அறிமுகப்படுத்துவது நயன்தாரா சக்ரவர்த்தியை. மம்முட்டி ,மோகன்லால் ஆகியோருடன் முப்பதுக்கும் அதிகமான மலையாளம், தெலுங்கு, தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நயன்தாரா சக்ரவர்த்தி. இவர்தவிர இன்னொரு கதாநாயகியும் படத்தில் உள்ளதாகவும் அது யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
நயன்தாராவுக்கு போட்டியாக நயன்தாராவை களம் இறக்கும் ஜெண்டில்மேன்
0 comment
37