ஐதராபாத்: மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி, ஒய்.ரவிசங்கர் இணைந்து தயாரிக்க, கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்துக்கு ‘வீர சிம்ஹா ரெட்டி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், கோபமான முகத்துடன் பாலகிருஷ்ணா தோன்றுவது அவரது கேரக்டரைச் சித்தரிக்கிறது. ‘புலிசேர்லா’ 4 கி.மீ என்ற மைல் கல் மீது அவர் கால் வைத்து நின்றிருக்கும் தோற்றம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பாலகிருஷ்ணாவின் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் துனியா விஜய், வரலட்சுமி நடிக்கின்றனர். எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனம் எழுத, ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார். சண்டைக் காட்சிகளை ராம், லக்ஷ்மன் அமைக்கின்றனர். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படம் திரைக்கு வருகிறது.
38