இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான படம், பிங்க். இப்படத்தின் தமிழ் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை என்ற படம் உருவானது. இதில் அமிதாப் பச்சன் வேடத்தில் அஜித் குமார், டாப்ஸி கேரக்டரில் ஸ்ரத்தா நாத் நடித்தனர். இப்போது பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக் உருவாகி வருகிறது. வக்கீல் சாப் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், அமிதாப் பச்சன் வேடத்தில் பவன் கல்யாண் நடித்து வருகிறார். டாப்ஸி வேடத்தில் நிவேதா தாமஸ் நடிக்கிறார். இந்தியில் டாப்ஸியின் தோழியாக கீர்த்தி குல்ஹாரி நடித்திருந்தார். தற்போது அந்த வேடத்தில் அஞ்சலி நடிக்கிறார். இப்படத்தை ராம் வேணு இயக்கி வருகிறார்.
32