விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கிறார், ஆத்மிகா. மீசைய முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்த அவர், கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசூரன் படத்தில் சந்தீப் கிஷன்ஜோடியாக நடித்துள்ளார். மெட்ரோ என்ற படத்தை இயக்கியவர், ஆனந்த் கிருஷ்ணன். அடுத்து அவர் இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு அன்பு இல்லையேல் ஒரு அணுவும் அசையாது என்று பெயரிட்டுள்ளார். இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க ஆத்மிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. இது ஒரு குறுகிய கால தயாரிப்பு என்று கூறப்படுகிறது.
37