தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாத நடிகைகள் சமீபகாலமாக கேரக்டர் ரோல்களில் தொடர்ந்து நடித்து வருகின்றனர். அப்படி விஜய்க்கு ஹீரோயினாக நடித்த நடிகை ஒருவர் தற்போது சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக நடிக்கும் செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன், ரகுல் பிரீட் சிங், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். வேற்று கிரகவாசிகளை மையமாகக்கொண்டு ஏலியன் படமாக உருவாகும் இந்த படத்தை இன்று நேற்று நாளை பட புகழ் ரவிக்குமார் இயக்குகிறார். 24AM ஸ்டுடியோஸ் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்நிலையில் வேற்று கிரக வாசியாக ரோபோ கலந்த கதாபாத்திரத்தில் விஜய் உடன் நெஞ்சினிலே படத்தில் ஹீரோயினாக நடித்த இஷா கோபிகர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேற வழியில்லை…சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக மாறிய இஷா கோப்பிகர்!
0 comment
44