சென்னை: ‘சர்தார் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்த படம் ‘சர்தார்’. இதில் ராஷி கன்னா, லைலா, சுன்கி பாண்டே உள்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் ‘சர்தார் 2’ பெயரில் உருவாகிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இதில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் நடிகைக்கான தேர்வு நடந்து வருகிறது. இப்படத்தையும் மித்ரன் இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க எஸ்.ேஜ.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.