சென்னை: சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதுவரை இல்லாத அளவில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் சிம்புவின் படமாக இந்த படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு போர் வீரன் கேரக்டரில் நடிக்கிறார். அதற்காக அவர் சில பயிற்சிகளை மேற்கொள்ள லண்டன் செல்ல இருக்கிறார் என பட வட்டாரம் தெரிவித்தது.
அவர் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் லண்டனில் தங்கி இருந்து சிறப்பு பயிற்சிகளை எடுத்துக் கொண்டு அதன் பிறகு சென்னை திரும்புவார் என்றும் அதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்கிறார்கள். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க சில ஹீரோயின்களிடம் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. ராஷ்மிகாவிடமும் பேச்சு நடப்பதாக கூறப்படுகிறது.