கவின் நடித்த லிப்ட் படம் ஓடிடியில் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்நிலையில் கவின் நடிப்பில் இப்போது 2 படங்கள் தயாராக உள்ளது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி தயாரிக்கும் ஊர்குருவி படத்தில் கவின் நடிக்கிறார். ஜீவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஜிப்ஸி என்ற திரைப்படத்தை தயாரித்த கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்தின் அம்பேத்குமார் என்பவர் தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்திலும் கவின் நடிக்க உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் கவின் ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் காமெடி மற்றும் ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரம் தொடங்கும் என்றும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
30