சமூக வலைத்தளங்களில் ஷாருக்கானுடன் ‘ஜவான்’ பற்றி சில ரசிகர்கள் உரையாடி வருகின்றனர். இப்படத்தின் பாடல்கள் குறித்த ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த ஷாருக்கான், ‘வருகிறது, விரைவில் வருகிறது. ஃபராவும், வைபவியும் அட்லியுடன் இணைந்து எடிட் செய்து வருகின்றனர். ஷோபியும் பணியாற்றியுள்ளார். விரைவில் உங்களிடம் கொண்டு வந்துவிடுவோம்’ என்றார். இப்படத்தின் ப்ரிவ்யூ வீடியோ இணையதளங்களின் பல்வேறு பிளாட்பார்ம்களில், 24 மணி நேரத்தில் 112 மில்லியன் அளவுக்கு சாதனை படைத்துள்ளது.
ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கவுரி கான், கவுரவ் வர்மா இணைந்து தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வரும் செப்டம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி ஆகியோருடன் கவுரவ வேடத்தில் சஞ்சய் தத், தீபிகா படுகோன் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.