சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஸ்ரீ லஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சிவகார்த்திகேயனின் 23வது படமான இதில் கன்னட நடிகை ருக்மணி வசந்த் நாயகியாக நடித்து வருகிறார். மலையாள நடிகர் பிஜு மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இதில் வில்லனாக இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படக்குழு இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் வித்யுத் ஜம்வால் படத்தின் செட்டுக்கு வந்து படப்பிடிப்பில் கலந்துகொள்வது போன்றும் முருகதாஸ் அவருக்கு காட்சியை விளக்குவது போலவும் இடம்பெற்றுள்ளது. இவர் தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’யில் வில்லனாக நடித்திருந்தார். ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவின் நண்பனாகவும் நடித்துள்ளார். இந்தியில் ஹீரோவாக நடித்து வருகிறார்.