காதலர் தினத்தை முன்னிட்டு சுமார் அரைடஜன் படங்கள் ரிலீஸ் ஆவதால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய படங்கள் ரிலீஸ் ஆவது, தமிழ் சினிமா வழக்கம். ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள நான் சிரித்தால் படக்குழு, காதலர் தினத்தை குறி வைத்து கடந்த சில நாட்களாக புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.அடுத்து அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய் சேதுபதி நடித்துள்ள படம், ஓ மை கடவுளே. ரொமான்டிக் காமெடி படமான இதன் புரமோஷனும் அதிரடியாக நடந்து வருகிறது. சந்தானம் நடிப்பில் கடந்த சில வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்த சர்வர் சுந்தரம், பெரும் போராட்டத்துக்குப் பிறகு ரிலீஸ் ஆக இருக்கிறது. டகால்டி படம் தந்த தோல்வியை இந்தப் படம் சரிகட்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் சந்தானம் ரசிகர்கள்.அமலா பால் நடித்துள்ள அதோ அந்த பறவை போல, கே.கே.கண்டி இயக்கியுள்ள டே நைட், விஜய் தேவரகொண்டா நடித்துள்ள வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படம் தமிழில் டப் ஆகி ரிலீஸ் ஆகிறது. இத்தனை படங்கள் ரிலீஸ் ஆனால், சரியான தியேட்டர் கிடைக்குமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது. இதனால் இப்போது அறிவிப்பு வந்தாலும் கடைசி நேரத்தில் சில படங்களின் ரிலீஸ் தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது.
35