தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துள்ள அஜித் குமார், இந்தியில் 2001 அக்டோபர் 26ல் திரைக்கு வந்த ‘அசோகா’ என்ற படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்தார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கினார். ஷாருக்கான், கரீனா கபூர் நடித்த இப்படத்தில் ஏற்றிருந்த கேரக்டருக்காக அஜித் குமார் சம்பளம் வாங்க மறுத்துவிட்டார். அதுபோல், 2012ல் கவுரி ஷிண்டே இயக்கிய ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் அஜித் குமார் சிறப்பு வேடத்தில் நடித்தார்.
இப்படத்துக்கும் அவர் சம்பளம் வாங்க மறுத்துவிட்டார். காரணம், இதில் ஹீரோயினாக நடித்தவர் ஸ்ரீதேவி. அவரது தீவிர ரசிகரான அஜித் குமார், அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதற்காகவே சம்பளம் வாங்காமல் நடித்தார். பிறகு மறைந்த ஸ்ரீதேவியின் வேண்டுகோளுக்காக, அவரது கணவர் போனி கபூர் தமிழில் தயாரித்த ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ ஆகிய படங்களில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்தார்.