சென்னை: ‘விக்ரம் கே தாஸ்’ படத்தை எஸ் எஸ் எல் எஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் எட்டாவது திரைப்படமாக ‘விக்ரம் கே தாஸ் ‘ உருவாகவுள்ளது. இப்படத்தில் தொடக்க விழா பூஜை சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தின் பாடல்கள் ஒலிப்பதிவு சென்னையில் நடைபெற்று வருகிறது. படத்தில் கஞ்சர்லா உபேந்திரா கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர் கௌதம் மேனனின் உதவியாளர் பாலு பொலிச்சர்லா இயக்குகிறார். பிரித்வி இசையமைக்கிறார். பாடல்களை சீர்காழி சிற்பி எழுதுகிறார் .விஜய் ஜெ.ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார் . கிரேசன் எடிட்டிங் செய்கிறார். பயர் கார்த்திக் சண்டை இயக்குநராகப் பணி புரிகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.